ராமதாஸ் ஆலோசனை அன்புமணி புறக்கணிப்பு

திண்டிவனம்: திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று காலை 11 மணிக்கு பாமக சமூக ஊடக பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. முக்கிய நிர்வாகிகளான கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கலந்து கொள்ளாத நிலையில் சமூக ஊடக பேரவை மாநில தலைவர் தமிழ்வாணன் மற்றும் 50க்கும் மேற்பட்ட சமூக ஊடக பேரவை நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் சமூக வலைதளங்களில் பாமகவின் வளர்ச்சித் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவது, எதிர்க்கட்சிகள் மூலம் வரும் கருத்துக்களை எப்படி கையாள்வது, அன்புமணியை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்ய உழைக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு ராமதாஸ் வழங்கியதாக கூறப்படுகிறது. ராமதாஸ் கூட்டத்தை தொடர்ந்து புறக்கணித்து வரும் அன்புமணி இந்த கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.

The post ராமதாஸ் ஆலோசனை அன்புமணி புறக்கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: