ராஜபாளையம் அருகே கண்மாய் ஓடையில் கட்டிய கடைகள் இடித்து அகற்றம்: அதிகாரிகள் அதிரடி

ராஜபாளையம், ஏப்.20: ராஜபாளையம் அருகே ஓடையில் கட்டியிருந்த கடைகளை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர்.ராஜபாளையம் அருகே மேல ராஜகுலராமன் சங்கம்பட்டி கண்மாய் ஓடையில் அயனாவரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் நான்கு கடைகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர்(பொறுப்பு) தனம் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், குறுவட்ட நில அளவர், கிராம உதவியாளர், ஊராட்சி மன்ற செயலாளர் மற்றும் காவல்துறையினர் ஓடைப்பகுதியில் கட்டப்பட்டு வந்த ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தையும் ஜேசிபி எந்திரம் மூலம் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தினர்.

The post ராஜபாளையம் அருகே கண்மாய் ஓடையில் கட்டிய கடைகள் இடித்து அகற்றம்: அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: