ராயபுரம் பகுதியில் 29 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் இருப்பது உறுதி.. பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 டோஸ் தடுப்பூசி போட முடிவு!!

சென்னை : சென்னை ராயபுரம் பகுதியில் 29 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வடசென்னையில் வர்த்தகம் அதிகம் உள்ள பகுதியான ராயபுரம் பகுதியில் ஜிஏ சாலையில் நேற்று முன்தினம் மாலை தெருநாய் ஒன்று ஒரு மணி நேரத்திற்குள் 29 பேரை கடித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியை சேர்ந்த மக்கள் அந்த நாயை அடித்து கொன்றுள்ளனர்.இந்த சம்பத்தில் காயமடைந்த பலரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனைத் தொடர்ந்து இறந்த நாயின் உடலை மீட்ட சென்னை மாநகராட்சி பிரேத பரிசோதனைக்காக சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தது.

இதையடுத்து சென்னை முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து வெறிநாய்கடி நோய் தடுப்பூசி போடும் பணியினை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அதே பகுதியில் சுற்றித்திரிந்த 25 நாய்களை பிடித்து, புளியந்தோப்பு நாய்கள் இனக் கட்டுப்பாடு மையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.ஒரு வாரத்திற்கு பின் வெறிநாய்கடி நோய் தடுப்பூசி போடப்பட்டு, பின்னர் பிடித்த இடத்திலேயே விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ராயபுரத்தில் 29 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பேருக்கும் 5 டோஸ் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

The post ராயபுரம் பகுதியில் 29 பேரை கடித்த நாய்க்கு ரேபிஸ் இருப்பது உறுதி.. பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 டோஸ் தடுப்பூசி போட முடிவு!! appeared first on Dinakaran.

Related Stories: