இளவரசர் சார்லஸ்க்கு பாரம்பரிய முறைப்படி இங்கிலாந்து மன்னராக முடிசூடப்பட்டது: லண்டன் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

லண்டன்: லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் மன்னர் மூன்றாம் சார்லஸூக்கு முடிசூடப்பட்டது. மன்னர் மூன்றாம் மூன்றாம் சார்லஸூக்கு செயின்ட் எட்வர்ட் கிரீடத்தை தேவாலயத்தின் பேராயர் சூட்டினார். லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் இங்கிலாந்து ராணியாக கமிலா சார்லஸுக்கு முடிசூட்டப்பட்டது. பாரம்பரிய முறைப்படி முடிசூட்டு விழா நடைபெற்றது.

இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து வந்த ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். அதற்குப் பிறகு, ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்தின் மன்னரானார். அவர் 3-ம் சார்லஸ் என்று அழைக்கப்படுகிறார். ராணியின் மறைவுக்கு பின்னர் மன்னராக சார்லஸ் அரியனை ஏறியபோதும், அவருக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமலேயே இருந்து வந்தது.

இந்த சூழலில் இன்று மே 6-ந் தேதி மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. கடைசியாக கடந்த 1953-ம் ஆண்டு ராணி 2-ம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு, 70 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த பாரம்பரிய விழா நடக்கிறது. லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது

நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டும் விழாவில் உலகத்தலைவர்கள் உள்பட 2000 பேர் விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். சார்லஸ் முடிசூட்டும் விழாவில் இந்தியா சார்பில் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தங்கர் பங்கேற்றுள்ளனர். பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட் மினிஸ்டர் அபே தேவாலயம் வரை மன்னர் சார்லஸ்க்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

சார்லஸ் முடிசூட்டும் விழாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பைபிள் வாசித்தார். பிரிட்டன் மன்னர் முடிசூட்டும் விழாவில் இந்தி ஒருவர் பைபிள் வாசித்தது இதுவே முதல்முறை ஆகும். பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸிடம் வைரம் உள்ளிட்ட கற்கள் பாதிக்கப்பட்ட வாள், 2 செங்கோல்கள் வழங்கப்பட்டுள்ளது. சூப்பர் டூனிக்கா எனப்படும் தங்க அங்கி அணிந்து 3-ம் சார்லஸ் தோற்றமளித்தார். இங்கிலாந்து மன்னராக சார்லஸ் முடுசூட்டிக்கொண்ட நிலையில் லண்டன் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

The post இளவரசர் சார்லஸ்க்கு பாரம்பரிய முறைப்படி இங்கிலாந்து மன்னராக முடிசூடப்பட்டது: லண்டன் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. appeared first on Dinakaran.

Related Stories: