இதையடுத்து, திருப்பணிக்குழு அமைக்காமல் எப்படி பாலாலயம் நடத்தப்படுகிறது? திருப்பணிக்கு நன்கொடையாக வரும் பணம் தணிக்கை செய்யப்படுகிறதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், அர்ச்சகர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் பாலாலயம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதா? நன்கொடை தணிக்கை செய்யப்படுகிறதா என்பது குறித்த முழு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 31ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். கோயுல்களில் அர்ச்சகர்களின் தகுதியை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும். சிறுவர்களும் அர்ச்சகர்களாக செயல்படுவதால், அர்ச்சகர்கள் நியமனத்துக்கு வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும். கோயில்களை சீரமைக்க அனுமதி வழங்கும் புராதன குழு உள்ளிட்ட குழுக்கள் மாற்றியமைக்கப்படும் என்று தெரிவித்தனர்.
The post அர்ச்சகர்களின் தகுதியை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.
