காவல்துறையின் பணியை செம்மையாக்க 5வது காவல் ஆணையத்தில் நாளை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காவல் துறையின் பணியை செம்மையாக்கும் வண்ணம், தமிழ்நாடு அரசு 2022ம் ஆண்டு 5வது காவல் ஆணையம் அமைத்துள்ளது. ஐந்தாவது காவல் ஆணையம், அசோக்நகர், சென்னை, காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது. காவல் பணியினை செம்மைப்படுத்த பொது மக்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன என்றும், நேரில் சந்தித்து மனு அளிக்க விரும்புவர்கள் கடந்த டிச.5ம் தேதியன்று காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நேரிடையாக சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மிக்ஜாம் புயல் மழையினால் பொது மக்களின் கருத்துக்கள் நேரில் பெற இயலவில்லை.எனவே, தபால் மூலம் தெரிவிக்க விரும்புவோர் 5-வது காவல் ஆணையம், காவல் பயிற்சி கல்லூரி வளாகம், அசோக் நகர், சென்னை-83 என்ற முகவரிக்கு தபாலில் தங்களின் கருத்துக்களை எழுதி அனுப்பலாம். மின் அஞ்சலில் அனுப்ப விரும்புவோர் fifthpolicecommision@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். நேரில் சந்தித்து மனு அளிக்க விரும்புபவர்கள் நாளை (21ம் தேதி) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மேற்கண்ட முகவரியில் நேரிடையாக சமர்ப்பிக்கலாம். விவரங்களுக்கு 9498155777 என்ற கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

The post காவல்துறையின் பணியை செம்மையாக்க 5வது காவல் ஆணையத்தில் நாளை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: