குட்கா வியாபாரியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் போலீஸ்காரர் கைது

விருத்தாசலம்: குட்கா வியாபாரிடம் பணம் பெற்று தலைமறைவாக இருந்த முதல்நிலை காவலரை போலீசார் நேற்று கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது அப்துல்லா (42). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி பெங்களூரில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை காரில் எடுத்துவந்து, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த மன்சூர் அலி(38) என்பவரிடம் விற்பனை செய்ய முயன்றார்.

தகவலறிந்த மங்கலம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் முதல்நிலை காவலர் பூவராகவன், குட்கா கடத்தி வந்த காரை பிடித்து அதில் இருந்த குட்கா பொருட்களை எடுத்துக்கொண்டார். மேலும் அவர்களிடம் ரூ.50 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு விடுவித்துள்ளார். இதையறிந்த விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பூவராகவன் பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி புவனகிரி அடுத்த அகர ஆலம்பாடியை சேர்ந்த கார் டிரைவர் முகமது அலி(44), முகம்மது அப்துல்லா, மன்சூர் அலி, முதல்நிலை காவலர் பூவராகவன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து 3 பேரை கைது செய்தனர். காவலர் பூவராகவனை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த காவலர் பூவராகவனை நேற்று போலீசார் கைது செய்தனர்.

The post குட்கா வியாபாரியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் போலீஸ்காரர் கைது appeared first on Dinakaran.

Related Stories: