×

கார்கே சென்னை வருகை ஒத்திவைப்பு வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடத்த திட்டம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான இந்தியா கூட்டணியில் தமிழகத்தை பொறுத்தவரை, திமுக தலைமையில் கூட்டணிக் கட்சிகள் இணைந்துள்ளன. திமுக சார்பில் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்காக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவுடன், கடந்த மாத இறுதியில் காங்கிரஸ் சார்பில் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். வரும் 9ம்தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில், காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி எண்ணிக்கை உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குசாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உத்தரவிட்டுள்ளார். இந்த கூட்டங்களில் அவரே பங்கு பெற்று வருகிறார். கேரளா, அசாம், டெல்லி ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் நடத்தப்பட உள்ளது.

இதற்கான பணிகளை தமிழக காங்கிரஸ் தலைமை செய்து வருகிறது. இந்நிலையில், வரும் 13ம்தேதி மல்லிகார்ஜூன கார்கே சென்னை வருவதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவதாகவும், அன்றைய தினம் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னையில் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடத்தும் தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இதனால் மல்லிகார்ஜூன கார்கே சென்னை வருகை தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் 18 அல்லது 19ம்தேதி தேனாம்பேட்டை காமராஜர் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குசாவடியில் இருந்தும் 3 பேர் இந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட உள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை 76ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளது. இந்த பணிகளை முடித்து தேதி இறுதி செய்யப்பட்டதும் மல்லிகார்ஜூன கார்கே இந்த கூட்டத்தில் பங்கேற்க சென்னை வருவார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.

 

The post கார்கே சென்னை வருகை ஒத்திவைப்பு வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடத்த திட்டம் appeared first on Dinakaran.

Tags : Karke Chennai ,Chennai ,Tamil Nadu ,DMK ,India alliance ,DR. ,Balu ,Congress ,Dinakaran ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...