×

திருநாவுக்கரசர் மகன் திருமண வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் – கற்பகம் தம்பதியின் மகன் சாய் விஷ்ணு-மேகா ஆகாஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று மாலை நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், ராஜகண்ணப்பன், கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு எம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி.க்கள் விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத், நிர்வாகிகள் அரும்பாக்கம் க.வீரபாண்டியன், தளபதி பாஸ்கர், கோபண்ணா மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மணமக்களை வாழ்த்தினர். இவர்களது திருமணம் இன்று காலை 10.45 மணியளவில் ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடக்கிறது.

The post திருநாவுக்கரசர் மகன் திருமண வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Tirunavukkarasar ,CHENNAI ,Sai Vishnu-Megha Akash ,Tamil Nadu Congress ,president ,Thirunavukarasar ,Karpagam ,Ramachandra Convention Center ,Thiruvanmiyur ,Chief Minister ,M.K.Stalin ,Vice President ,Thirunavukkarasar ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...