×

ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இல்லந்தோறும் அன்பும் அமைதியும் நிலவட்டும்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு இல்லம் தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும் என தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்): அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும். அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும் என்கிற உரிய கருத்தினை அனைவரும் அறியும் வகையில் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் இந்த திருஓணத்திருநாளில் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ் தலைவர்): எவ்வித வேறுபாடுமின்றி பண்பாடு, கலாச்சாரத்தை தனித்தன்மையுடன் காப்பாற்றி, சமூக நல்லிணக்கத்தோடு தமிழகத்தில் வாழ்ந்து வருகிற மலையாள பெருமக்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
ராமதாஸ் (பாமக நிறுவனர்): சொன்ன சொல் மாறாத மன்னன் மகாபலி மக்களை சந்திக்க வரும் திருவோணம் திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள மலையாளம் பேசும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): கேரளா மற்றும் தமிழகத்தில் வாழும் மக்கள் வாழ்வில் துன்பம் விலகி நன்மை பெருகவும், தடைகள் விலை வெற்றிகள் சேரவும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அன்புமணி (பாமக தலை வர்): அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்கவும் வேண்டும் என்று வேண்டி திருவோணம் கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
டிடிவி. தினகரன் (அமமுக): இந்த திருநாளில், இல்லந்தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும், மகிழ்ச்சியும் செல்வமும் பெருகட்டும்.
ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்): இல்லந்தோறும் இன்பம் பொங்கட்டும், அன்பு தவழட்டும், அமைதி நிலவட்டும், மகிழ்ச்சி தவழட்டும், செல்வம் பெருகட்டும். மலையாள மொழி பேசும் மக்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்.
எர்ணாவூர் நாராயணன்(சமத்துவ மக்கள் கழகம்): கேரளாவில் ஓணம் பண்டிகை அறுவடைக் காலத்தைக் குறிக்கிறது மற்றும் இந்து புராணங்களில் வேரூன்றியிருக்கிறது. கேரளா வாழ் மக்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post ஓணம் பண்டிகை கொண்டாட்டம் இல்லந்தோறும் அன்பும் அமைதியும் நிலவட்டும்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : May Onam ,CHENNAI ,Onam ,Edappadi Palaniswami ,AIADMK ,General ,Onam Festival May ,
× RELATED ஓணம் பண்டிகை எதிரொலி சென்னை-கேரள...