×

பொதுமக்களின் மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து உரிய காலத்தில் தீர்வு காண வேண்டும்

*குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு

திருப்பதி : பொதுமக்களின் மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து உரிய காலத்தில் தீர்வு காண வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு திருப்பதி கலெக்டர் உத்தரவிட்டார். திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் லட்சுமி ஷா தலைமையில் நடந்தது. இதில், மனுதாரர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 241 மனுக்களை அளித்தனர். அதில் வருவாய்த்துறை – 184, எம்.பி.டி. -6, பிடி ஹவுசிங்-3 ,சமூக நலத்துறை – 2, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் – 2, டிஆர் – 3, எஸ்பிடிசிஎல – 6, ஒய்எஸ்ஆர் ஆரோக்யஸ்ரீ – 1 , காவல் துறை – 11, நகராட்சி ஆணையர் – 4, நிர்வாக பொறியாளர் சாலை மற்றும் போக்குவரத்து – 1, ஜேசி சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறை – 5, ஏடி சர்வே மற்றும் நில பதிவுகள் – 1, ஐசிடிஎஸ் – 1, மாவட்ட வனத்துறை -1 உள்ளிட்ட 241 மனுக்கள் வரப்பெற்றது.

மாவட்ட அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்தி அனைத்து மனுக்கள் மீதும் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு துறைகள் தொடர்பான மாவட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

The post பொதுமக்களின் மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து உரிய காலத்தில் தீர்வு காண வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirupati Collector ,Dinakaran ,
× RELATED இயற்கை விவசாய பொருட்கள் விற்பனை...