×

திருவனந்தபுரம்-நிலம்பூர் ரயிலில் போலி பெண் டிக்கெட் பரிசோதகர் கைது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் இருந்து நிலம்பூருக்கு நேற்று இரவு ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் ஒரு பெண் டிக்கெட் பரிசோதகர் பயணிகளின் டிக்கெட்டுகளை பரிசோதித்துக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் உண்மையான டிக்கெட் பரிசோதகர் அந்த பெட்டிக்கு வந்தார். தான் பணியில் இருக்கும்போது அதே பெட்டியில் வேறு ஒரு பரிசோதகரா? என அவர் வியப்படைந்தார். ஒரிஜினல் டிக்கெட் பரிசோதகரை கண்டதும் போலி டிக்கெட் பரிசோதகருக்கு வியர்த்து கொட்டியது. விசாரணையில் அவர் போலி பரிசோதகர் என்பது உறுதியானது. அவர் கொல்லத்தைச் சேர்ந்த ரம்லத் (42) என தெரியவந்தது. அவரை கைது செய்து கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post திருவனந்தபுரம்-நிலம்பூர் ரயிலில் போலி பெண் டிக்கெட் பரிசோதகர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Nilampur ,Rajya Rani Express ,Nilambur ,Dinakaran ,
× RELATED நடிகர்கள் மீது பலாத்கார புகார்...