×

சோதனை ஓட்டத்தின்போது வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

மகாசமுந்த்: சட்டீஸ்கரின் துர்க்கில் இருந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. விசாகப்பட்டினத்துக்கு சென்றுவிட்ட வந்தே பாரத் ரயில் துர்க் நோக்கி வந்து கொண்டு இருந்தது. பாக்பக்ரா ரயில் நிலையம் வழியாக ரயில் சென்றபோது சிலர் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரயிலின் சி2, சி4 மற்றும் சி9 ஆகிய மூன்று பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post சோதனை ஓட்டத்தின்போது வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு appeared first on Dinakaran.

Tags : Stone ,Durg ,Chhattisgarh ,Visakhapatnam ,Andhra Pradesh ,
× RELATED சூளகிரி அருகே மண்ணில் புதைந்து...