×

உ.பி.யில் வாடிக்கையாளர்களுக்கு பழச்சாறுடன் சிறுநீர் கலந்து கொடுத்ததாக வியாபாரி கைது

காசியாபாத்: உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் அமீர்(29) என்பவர் பழச்சாறு கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு பழச்சாறில் சிறுநீர் கலந்து கொடுப்பதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் அமீரின் கடையில் போலீசார் சோதனை நடத்தினார்கள். சோதனையின்போது ஒரு கேன் முழுவதும் சிறுநீர் நிரப்பப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அமீரை கைது செய்தனர். மேலும் கடையில் இருந்த 15வயது சிறுவனையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

The post உ.பி.யில் வாடிக்கையாளர்களுக்கு பழச்சாறுடன் சிறுநீர் கலந்து கொடுத்ததாக வியாபாரி கைது appeared first on Dinakaran.

Tags : U. B. ,Yil ,Ghaziabad ,Amir ,Ghaziabad, Uttar Pradesh ,Mundinam Amir ,U. ,Dinakaran ,
× RELATED ஹெலிகாப்டர் திருட்டு: உ.பி.பாஜ அரசை சாடும் அகிலேஷ் யாதவ்