×

பிரதமர் இல்லத்தில் புதிய உறுப்பினர் ‘தீபஜோதி’

டெல்லி: லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பல்வேறு பிராணிகள் வளர்க்கப்படுகின்றன. அதில், பசு மாடு ஒன்று சமீபத்தில் கன்று ஈன்றது. இந்த கன்றுக்குட்டிக்கு பிரதமர் மோடி தீபஜோதி என பெயர் சூட்டி உள்ளார். பிரதமர் இல்லத்தின் புதிய உறுப்பினராகி உள்ள தீபஜோதியின் புகைப்படத்தையும் அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

கன்றுக்குட்டியின் நெற்றியில் ஒளியின் வடிவம் இருப்பதால் தீபஜோதி என பெயரிட்டிருப்பதாக கூறியிருக்கும் பிரதமர் மோடி, அக்கன்றுக்குட்டியை தூக்கி கொண்டு, மாறி மாறி முத்தம் தந்து அன்பு செலுத்தும் புகைப்படங்களையும், பூஜை அறையில் நுழையும் கன்றுக்குட்டிக்கு மோடி மாலை அணிவித்து பாசத்துடன் கவனித்துக் கொள்ளும் வீடியோக்களையும் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

The post பிரதமர் இல்லத்தில் புதிய உறுப்பினர் ‘தீபஜோதி’ appeared first on Dinakaran.

Tags : Deepajyothi ,Prime Minister's House ,Delhi ,Lok Kalyan Marg ,Modi ,
× RELATED டெல்லியில் பரபரப்பு ரூ.5,620 கோடி...