×

வேலைக்கார சிறுமி சித்ரவதை சமாஜ்வாடி எம்எல்ஏ, மனைவி மீது வழக்கு

படோஹி: உத்தரப்பிரதேசத்தின் படோஹி தொகுதியின் சமாஜ்வாடி எம்எல்ஏ ஜாகித் பெக். அவரது மனைவி சீமா பெக். மாலிகானா மொகல்லாவில் உள்ள எம்எல்ஏ வீட்டில் வேலை செய்துவந்த 17வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் 14 வயது சிறுமி ஒருவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சட்டவிரோதமாக எம்எல்ஏ வீட்டில் பணி செய்து வருவதாக தெரியவந்தது. சிறுமியிடம் நடத்திய விசாரணையில் எம்எல்ஏ ஜாகித் மற்றும் அவரது மனைவி சீமா ஆகியோர் அடித்து சித்ரவதை செய்ததாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து எம்எல்ஏ மற்றும் அவரது மனைவிக்கு எதிராக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post வேலைக்கார சிறுமி சித்ரவதை சமாஜ்வாடி எம்எல்ஏ, மனைவி மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Samajwadi MLA ,Badohi ,Uttar Pradesh ,Jakit Beg ,Seema Beg ,MLA ,Maligana Mohalla ,
× RELATED குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்