மெரினா கடலில் கலைஞர் பேனா நினைவு சின்னம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இருக்காது: ஜி.கே.வாசன் பேட்டி

சென்ன: தமாகா இளைஞர் அணியின் 14வது செயற்குழு கூட்டம் மயிலாப்பூர் கவிக்கோ அரங்கத்தில் நேற்று நடந்தது. இளைஞர் அணியின் மாநில தலைவர் யுவராஜா தலைமை வகித்தார். இதில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர், முன்னாள் எம்பி பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், வர்த்தகர் அணி தலைவர் ஆர்.எஸ்.முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமாகா இடம் பெறும் கூட்டணியில் அதிக தொகுதிகள் பெற்று போட்டியிடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை தொடர்ந்து, ஜி.கே.வாசன் பேட்டி அளிக்கையில், ‘‘ கலைஞரின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்து சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் விதிமுறைக்கு உட்பட்டு பணியை செய்வார்கள் என நம்புகிறேன். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இருக்காது என்பதை ஒன்றிய அரசு உறுதி செய்திருக்கும் என முழுமையாக கருதுகிறேன்’’ என்றார்.

The post மெரினா கடலில் கலைஞர் பேனா நினைவு சின்னம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இருக்காது: ஜி.கே.வாசன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: