நீலகிரி கெனல் கிளப் சார்பில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி; பல்வேறு ரக நாய்களை கண்டு சுற்றுலா பயணிகள் உற்சாகம்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கெனல் கிளப் சார்பில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் பல வித நாய் ரகங்கள் கலந்துகொண்டன. நீலகிரியில் ஆண்டுதோறும் கோடை சீசன் மற்றும் 2வது சீசன் நாட்களில் நீலகிரி கெனல் கிளப் சார்பில் நாய்கள் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு குன்னூரில் உள்ள பிராவிடென்ஸ் கல்லூரியில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் கண்காட்சிக்காகவே பிரத்யேகமாக வளர்க்கப்படும் செல்ல பிராணிகளான ஷிஃஸூ, சைபீரியன் ஹஸ்கி, காக்கர் ஸ்பானியல், கோல்டன் ரெட்ரீவர், பீகல், ராஸ்மினோ உள்பட 300 வகை நாய் இனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

முன்னதாக காவல்துறை, ராணுவம் மற்றும் ரயில்வே காவல் நிலையங்களில் குற்றங்களை கண்டறிய பயன்படுத்தப்படும் மோப்ப நாய்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில் லாப்ரடர், ஜெர்மன் ஷெப்பர்ட், டாபர்மேன் நாய் இனங்கள் கலந்துகொண்டன. கட்டளைகளுக்கு ஏற்ப கீழ்ப்படிதல், மோப்ப திறன் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை செய்து காட்டி பார்வையாளர்களை ரசிக்க வைத்த நாய்களின் உரிமையாளர்களுக்கு இறுதியாக பரிசுகளும் வழங்கப்பட்டன.

The post நீலகிரி கெனல் கிளப் சார்பில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சி; பல்வேறு ரக நாய்களை கண்டு சுற்றுலா பயணிகள் உற்சாகம்..!! appeared first on Dinakaran.

Related Stories: