×

டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி ஆம் ஆத்மி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

நாகர்கோவில், பிப்.12 :  டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மகத்தான வெற்றி பெற்றது. இதையடுத்து  குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷெல்லி தலைமை வகித்தார். ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : AAP ,assembly elections ,Delhi ,
× RELATED கட்டுமான அமைப்பு சாரா...