×

மாநில அளவிலான வாள் விளையாட்டு போட்டி ஏ.பி.ஜே.எம். மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பதக்கம்

கருங்கல், பிப்.21: மாநில அளவில் மாணவர்களுக்கான வாள் விளையாட்டு போட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்றது. அதில் கருங்கல் சூசைபுரம் ஏ.பி.ஜே.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ,
மாணவிகள் கலந்து கொண்டனர். யு 17 சேபர் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் குழுப்போட்டியில் மெர்றோ பெக்ஸில் என்ற மாணவன் தங்கப் பதக்கமும், பிரதீஷா என்ற மாணவி வெள்ளிப் பதக்கமும் பெற்று
பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். பதக்கம் பெற்ற மாணவர்களைப் பள்ளித் தாளாளர் அருட்தந்தை தோமஸ் பூவத்து மூட்டில், முதல்வர் அருட்சகோதரி டெஸி, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர் செல்வகுமார் ஆகியோர் பாராட்டினர்.

Tags : Karangal ,Kanchipuram district ,Susipuram A. B. J. M. Metric High School ,U-17 ,Saber Men ,Women's Group Match ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்