×

குமரி தடகள வீராங்கனைக்கு அரசுப்பணி முதலமைச்சர் பணியாணை வழங்கினார்

அருமனை,பிப்.20: கடையாலுமூடு பகுதியை சேர்ந்த முஜிப்,ஸலாமத் தம்பதியின் மகள் சமீஹா பர்வீன். செவித்திறன் மற்றும் பேசும் திறன் குறைபாடுடைய தடகள வீராங்கனையான சமீஹா பர்வீன் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பல போட்டிகளில் விளையாடி 11 தங்கம், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 13-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். முக்கியமாக இவர் நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டிகளில் சிறந்து விளங்குகிறார். விளையாட்டு வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் நடந்த சாதனை படைத்த தமிழக வீரர்களை கவுரவப்படுத்தும் நிகழ்ச்சியில் ஊக்கத்தொகை ரூ.17 லட்சமும், கல்வித்துறையில் அரசு பணிக்கான ஆணையையும் வழங்கினார்.

Tags : Chief Minister ,Kumari ,Arumanai ,Sameeha Parveen ,Mujib ,Salamat ,Kadayalumoodu ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்