×

பெயின்டிங், சீரமைப்பு பணிகள் துவங்கியது துறையூர் அருகே பட்டப்பகலில் அடுத்தடுத்த 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளை

துறையூர், பிப்.6: துறையூர் அருகே கீழகுன்னுபட்டி கிராமத்தில் பட்டப்பகலில் அடுத்தடுத்த இரு வீடுகளில் 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.89 ஆயிரம் ரொக்கம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். கீழகுன்னுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், விவசாயி. இவர் நேற்று தனது உறவினர் வீட்டு திருமணத்திற்காக நீலகிரி சென்றுள்ளார். இவருடைய மனைவி இளையாத்தாள் 100 நாள் வேலைக்கு வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த சமயத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து மர்ம நபர்கள் இவருடைய வீட்டின் பூட்டின் கொண்டியை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து உள்ளே இருந்த ரூ.89 ஆயிரம் ரொக்கம் மற்றும் 4 பவுன் நகைகள் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர்.

வீட்டின் கதவு தாழ்பாள் உடைந்து இருந்ததையறிந்து அக்கம்பக்கத்தினர் சேகரின் மனைவிக்கு தகவல் அளித்தனர். வீட்டிற்கு வந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது தங்க நகைகள், பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. அதுபோல அருகிலுள்ள தன்னாசி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே பெட்டியில் வைத்திருந்தால் ரூ.3,000 ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த சில நாட்களாக வட இந்தியர்கள் சிலர் போர்வை விற்பது போல் இப்பகுதியை நோட்டமிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து துறையூர் போலீசார் திருட்டு சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே தெருவில் பட்டப்பகலில் அடுத்தடுத்த இரு வீடுகளில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : houses ,Thuraiyur ,
× RELATED மணிப்பூரில் மீண்டும் வன்முறை; 70 வீடு,...