×

108 கிலோ இனிப்பு வகைகளால் அம்மனுக்கு அலங்காரம்

முசிறி, ஜூன் 23: முசிறி அங்காளம்மன் கோவிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து தினசரி மண்டல பூஜை விழா நடைபெற்று வருகிறது 35ம் நாளான நேற்று அங்காளம்மன் சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 108 கிலோ எடையுள்ள இனிப்பு வகைகளால் அங்காளம்மன் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது.

அப்போது விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும்,வியாபாரம் சிறக்கவும்,பொதுமக்கள் நோய் நொடியின்றி சுபிட்சமாக வாழவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. பூஜைகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

The post 108 கிலோ இனிப்பு வகைகளால் அம்மனுக்கு அலங்காரம் appeared first on Dinakaran.

Tags : Musiri ,Musiri Angalamman ,Mandal Puja ,Angalamman ,Swami ,
× RELATED திருச்சியில் மளிகை கடை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு