×

வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் முடிவு காட்டுப்புத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் ராஜினாமா

தொட்டியம், ஜூன் 23: தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் பேரூராட்சி மன்ற கவுன்சிலர் பதவியை ஐஜேகே சேர்ந்த பிரமுகர் ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூர் பேரூராட்சி அமைந்துள்ளது . இந்த பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது இதில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பத்தாவது பாட்டில் ஐ ஜே கே கட்சியின் சார்பில் கருணாகரன் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தேர்தல் பிரச்சாரத்தின் போது தான் வெற்றி பெற்றால் வார்டு பகுதி மக்களுக்கு பல்வேறு நல்ல திட்ட உதவிகளை செய்வதாகவும் செய்ய தவறினால் தனது பதவியை இரண்டரை ஆண்டு ராஜினாமா செய்வதாகவும் கூறியிருந்தார்.

சில திட்ட பணிகள் செய்து முடித்த நிலையில் சமுதாய கூடம், பெண்களுக்கான சுகாதார வளாகம் ஆகியவற்றை கட்டி தர முடியாமல் போனதால் தனது பதவியை தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறுதியின் படி ராஜினாமா செய்து நிர்வாகத்தில் கடிதம் வழங்கினார். முன்னதாக 10 வது வார்டு பகுதியில் தான் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதற்கான காரணத்தை துண்டு பிரசுரங்கள் அச்சடித்து பொதுமக்களிடம் விநியோகம் செய்து தகவல் தெரிவித்தார். இதனால் பேரூராட்சி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால் முடிவு காட்டுப்புத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Katuputhur ,Municipal Councillor ,Tutiam ,Pramukh ,IJK ,Mayor's Council ,Kattuputhur ,Kattuputhur district ,Thotiam ,Trichy ,Dinakaran ,
× RELATED ஓவேலி பேரூராட்சி கவுன்சிலருக்கு ஒரு நாள் காவல்..!!