×

வாங்கிய கடன்களை அடைக்க அறுவடை செய்த நெல்களை விளை நிலங்களில் விற்பனை

ஆர்.எஸ்.மங்கலம், பிப்.4:  ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல்அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை விளை நிலங்களிலேயே விற்பனை செய்து வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 4 வருடங்களாக மழை இல்லாமல் விவசாயம் பொய்த்து விட்டது. இதனால் விவசாயிகள் பல்வேறு வகையில் கடன் பெற்று மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தனர். இந்த ஆண்டும் மழை பெய்யாமல் விவசாயம் விளைச்சல் இல்லாமல் போனால், ஊரையே காலி செய்து விட்டு பிளைப்பு தேடி நகர்புறங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்ற மன நிலையில் விவசாயிகள் இருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பாக நடைபெற்றது.

ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான பிச்சனாகோட்டை, செட்டிய மடை, பொட்டக்கோட்டை, புலிவீர தேவன்கோட்டை, செங்குடி, பூலாங்குடி, ஆனந்தூர், ஆய்ங்குடி, பணிக்கோட்டை, சனவேலி, செங்கமடை, பாரனூர், உப்பூர், மங்கலம், சோழந்தூர் உள்ளிட்ட சுற்று வட்டாரங்களில் விவசாயம் ஒரளவு நன்றாக விளைந்து கதிர் அறுவடை இயந்திரம் மூலம் கதிர்களை அறுவடை செய்வது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் இந்த ஆண்டும் விவசாயம் செய்வதற்கு ஏராளமான கடனை வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் செலவு செய்து விவசாயம் செய்தனர். இப்படியான சூழ்நிலையில் அந்த கடன்களை எல்லாம் அடைப்பதற்காக அறுவடை செய்த நெல் வீடுகளுக்கு கூட கொண்டு செல்லாமல் விளை நிலங்களில் அறுவடை செய்த இடத்திலேயே நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.

Tags : paddy lands ,
× RELATED பட்டா நிலங்களில் கஜாவால் வீழ்ந்த...