×

பட்டா நிலங்களில் கஜாவால் வீழ்ந்த மரங்களை அகற்ற குழு அமைப்பு தொடர்பு எண் வெளியீடு

திண்டுக்கல், நவ. 28:  கஜா புயலில் வீழ்ந்த மரங்களை பட்டா நிலங்களில் அகற்ற அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. உடன் தொடர்பு கொண்டு இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளலாம். கஜா புயலினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொடைக்கானல், நத்தம், திண்டுக்கல், தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இவற்றை மரப்பயிர்களான சில்வர்ஓக், தேக்கு, உலகமரம், நெல்லரை, சந்தனவேம்பு, குமில், ரோஸ்உட் உள்ளிட்ட மரங்களை அகற்ற முறையான அனுமதி தேவை என்பதால் இப்பணியில் தொய்வு ஏற்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்துக் கொண்டே இருந்தனர்.

இதனை தொடர்ந்து விழுந்த மரங்களை பட்டா நிலங்களில் இருந்து அப்புறப்படுத்தி அவற்றை கொண்டு செல்வதற்கு வசதியாக வருவாய், வனம், தோட்டக்லைத்துறைகள் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் பட்டாநிலங்களில் விழுந்த மரங்களை தணிக்கை செய்து கணக்கெடுப்பு செய்ய உள்ளனர். எனவே விவசாயிகள் தமது பட்டா நிலங்களுக்கான உரிமைச்சான்று (பட்டா நகல்) வங்கிக்கணக்கு எண், ஆதார், மொபைல் எண் ஆகியவற்றை அலுவலர்களுக்கு வழங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பட்டாநிலத்தில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தி உரிய ஆணை வருவாய்த்துறை மூலம் வழங்கப்படும்.

விவசாயிகள் தங்களது நிலத்தில் மரப்பயிர்கள் சேதம் குறித்து கலெக்டர் அலுவலகம், கொடைக்கானல் கோட்டாட்சியர்-வட்டாட்சியர் அலுவலகங்களை தனிநபராகவோ, விவசாயிகள் சங்கத்தின் சார்பாகவோ மனுக் கொடுக்கலாம்.இதுகுறித்த சந்தேகம், புகார் இருந்தால் உடன் (0451) 1077, 2460320 மற்றும் வாட்ஸ்அப் 75988 66000 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Tags : paddy lands ,
× RELATED வாங்கிய கடன்களை அடைக்க அறுவடை செய்த நெல்களை விளை நிலங்களில் விற்பனை