×

தொழுநோய் விழிப்புணர்வு பேரணி

தொண்டி, ஜன.23:  தேசிய தொழு நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொண்டி மேற்கு தொடக்க பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேசிய தொழு நோய் ஒழிப்புத் திட்டம் சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு இயக்கம் 2020 நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக தொண்டி மேற்கு தொடக்கப்பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியை சாந்தி தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி துவக்கி வைத்தார். தொழுநோயின் அறிகுறிகள், பரவும் விதம் தடுக்கும் முறைகள் குறித்து மாணவர்கள் கோஷம் எழுப்பி சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது. டாக்டர் அருண், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்தானராஜ், மருத்துவ பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Leprosy Awareness Rally ,
× RELATED தொழுநோய் விழிப்புணர்வு பேரணி