×

தொழுநோய் விழிப்புணர்வு பேரணி

 

ஆண்டிபட்டி, பிப். 14: ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் சார்பில், ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோவன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலி துவக்கி வைத்தனர். பேரணி ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி ஆண்டிபட்டி நகரின் முக்கிய வீதியின் வழியாக பேருந்து நிலையம் வரை சென்று பின்பு மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

பேரணியில் வந்த மாணவிகள் தொழுநோய் விழிப்புணர்வு குறித்தும், நோயை தீர்க்கும் கூட்டு மருந்து சிகிச்சை குறித்தும் பாதாதைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் முன்னதாக நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் டி.சுப்புலாபுரம் மருத்துவ அலுவலர் ஆசைத்தம்பி, தமிழ் ஆசிரியர் முருகபாரதி, பட்டதாரி ஆசிரியர் நாகராணி, மாவட்ட துணை இயக்குனர் நல கல்வியாளர் தர்மேந்திர கண்ணா, துணை இயக்குனர் வேல்முருகன்(காசநோய்), நலக்கல்வியாளர் முருகமணி, ஆசிரியர்கள் ராஜேந்திரன், மாரிமுத்து, சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தொழுநோய் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Leprosy awareness rally ,Antipatti ,Government Girls Higher Secondary School ,National Leprosy Eradication Programme ,Antipatti Government ,Girls ,Higher Secondary School ,Dinakaran ,
× RELATED சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோவில் கைது