×

கடல் அலையால் சேதமடையும் கரை தடுப்புச்சுவர் கட்ட மீனவர்கள் வலியுறுத்தல்

சாயல்குடி, ஜன.22:  சாயல்குடி கடற்பகுதியில் கடல் அலையால் கரைகள் சேதமடைந்து பனை மரங்கள் விழுந்து வருவதால், தடுப்புச்சுவர் கட்ட மீனவ கிராம மக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார் வளைகுடா கடற்பகுதியான கன்னிராஜபுரம், ரோச்மா நகர், நரிப்பையூர், மூக்கையூர், கீழமுந்தல், மாரியூர், வாலிநோக்கம் வரையிலான 15க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி கடற்கரை மிக ஆழமானது என்பதால் எந்நேரமும் கடல் அலையின் சீற்றம் சற்று அதிகமாக இருக்கும். இரவு நேரங்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கூடுதலாக அலை சீற்றமாக இருக்கிறது. பேரலை ஏற்பட்டு, கரையை சேதப்படுத்தி வருகிறது.

இதனால் கரையோரங்களில் மண் அரிமானத்தை தடுப்பதற்கு நடப்பட்ட பழமையான பனை மரங்கள், சவுக்கு மரங்கள் வேறோடு சாய்ந்து வருகிறது, கரை நாளுக்கு நாள் சேதமடைந்து வருவதால் கரை மட்டம் கிராமத்தின் நிலப்பரப்பிற்கு சமமான நிலைக்கு மாறி வருகிறது. இதனால் பேரிடர் காலத்தில் கடல் தண்ணீர் கடற்கரை அருகே உள்ள மீனவர் வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளது, எனவே அலையை தடுப்பதற்கு கரையோரங்களில் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். புதிய பனைமரம், சவுக்கு போன்ற மரங்களை நடவேண்டும் என மீனவ கிராமமக்கள அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : fishermen ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...