வாழந்து கொண்டு இருப்பவர்களின் தேசம் ஒன்றும் இறந்தவர்களின் தேசம் ஒன்றும் இருக்கிறது. அதற்கு இடையேயிருக்கும் ஆதரவற்றவர்களை அரவணைக்கும் நேசக்கரங்கள் இல்லம், தலைவர் செல்லதுரையில் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.சேலம் மாநகரில் வாழ்ந்த வாழ்க்கையே கனவாகி சொந்த பந்தங்களால் புறந்தள்ளப்பட்டு அடிப்படை தேவைகளுக்கு கரம் கொடுக்க கூட வழியின்றி வாழத்தவிக்கும் வாரிசு அற்ற முதியோர்களை கனிவுடன் அரவணைத்து அவர்களின் ஆயுள் காலம் முழுமைக்கும் உணவு, உடை, உறைவிடம், மருத்துவ வசதி, பொழுது போக்கிற்காக தொலைக்காட்சி நூலக வசதியுடன் தனது குடும்பத்துடன் இருப்பது போன்ற சந்தோஷ நிலையில் அவர்களை அரவணைத்து வருகிறது நேசக்கரங்கள் இல்லம்.2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த முதியோர் இல்லம் தற்போது சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் வனத்துறை சோதனைச்சாவடி பின்புறம் இயற்கை சூழலில் ஆதரவற்ற 30 முதியோர்களை இலவசமாக தங்கி நன்கு பராமரித்து தொண்டிற்காகவே செயல்பட்டு வருகிறது .
தாய் தான் கடவுள் என்று சிறு குழந்தைகளின் உதடுகளிலும் இதயங்களிலும் இருக்கிறதை நிரூபிக்கும் வகையில் சான்றோர் பெருமக்களால் 1994ம் ஆண்டு பெற்றோர் அற்ற 4 குழந்தைகளுடன் ஒரு வாடகை கட்டிடத்தில் தொடங்கப்பட்ட நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போர் இல்லம் தற்போது டாக்டர் ராவ் நிதியுதவியுடன் கட்டி கொடுக்கப்பட்டது. குழந்தைகளுக்கு 3 வேளை உணவு, உடை, மருத்துவம் கல்வி, மாலை நேரத்தில் தனிப்பயிற்சிகள், விடுமுறையில் சுற்றுலா என சந்தோஷமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கிறது.இருபாலருக்கும் தனித்தனி இல்லங்கள் உண்டு. இந்த இல்லத்தில் மாணவர்கள் தற்போது பிளஸ் -2 தேர்வில் 1200க்கு 1133 மதிப்பெண் பெற்றும் 10ம் வகுப்பு தேர்வில் 500க்கு 486 மதிப்பெண் பெற்றும் கல்வியில் சிறப்பாக விளங்குவதை பார்க்கும் போது நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போர் இல்லம் முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளது என்றும், நல்வழியில் நடத்தி வரப்படுகிறது என்றும் இல்லத்தின் தலைவர் செல்லதுரை, செயலாளர் பெரியசாமி, செயலாளர்(வளர்ச்சி) கோவிந்தசாமி, பொருளாளர் பாலசங்கர் ஆகியோர் கூறினர்கள்.