×

மழைக்கு வேகமாக பரவும் பார்த்தீனியம் செடிகளை அழிக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

தொண்டி, டிச.25: மழை காலங்களில் அதிகரிக்கும் பார்த்தீனியம் செடி பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பார்த்தீனியம் செடியின் விதைகள் காற்றின் மூலம் பல்வேறு இடங்களுக்கு வேகமாக பரவக் கூடியது. பயன்படுத்தாத காலி நிலங்கள், வறண்ட நிலங்கள், சாகுபடி செய்யாத விவசாய நிலங்கள், கழிவுநீர் தேங்கும் இடங்கள், அதிகமாக நீர் தேங்கும் பகுதிகள் மற்றும் சாலைகளின் ஓரங்களில் பார்த்தீனியம் நச்சு செடியின் விதைகள் பரவி எளிதில் வளரும். சாகுபடி செய்யப்பட்ட விவசாய நிலங்களிலும் இச்செடிகள் விதைக்கப்பட்ட செடியோடு சேர்ந்து, களையாக வளர்கிறது. இந்த நச்சுசெடிகள் மழை காலங்களில் வேகமாக பரவக் கூடியது. பார்த்தீனியம் நச்சுச் செடியால் உடல் அரிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. விளை நிலங்களில் பயிர்களின் மகசூல் குறைவதற்கும் வாய்ப்புள்ளது. கடந்த சில தினங்களாக மழை அவ்வப்போது பெய்து வருகிறது. மழையின் காரணமாக இந்த நச்சு செடியின் விதைகள் துளிர் விட்டு வேகமாக வளரும் வாய்ப்புள்ளது. பார்த்தீனியம் நச்சுச்செடி அதிகரிக்காமல் மற்றும் பரவாமல் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : plants ,
× RELATED பீட்ரூட் கீரை மசியல்