×

பீட்ரூட் கீரை மசியல்

தேவையானவை:

பீட்ரூட் கீரை – 4 செடிகளின் இலைகள் (நான் செய்தது)
சின்ன வெங்காயம் – 7
தக்காளி – பாதி
பச்சை மிளகாய் – 1
புளி – சிறு கோலி அளவு
பூண்டிதழ் – 7 எண்ணிக்கை
உப்பு – தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
மிளகு – 2
சீரகம்
காய்ந்த மிளகாய் – 1
பெருங்காயம்

செய்முறை:

முற்றிய, பூச்சி இலை களை நீக்கி விட்டு, மீதமுள்ள கீரையை நன்றாக நீரில் அலசித் தண்ணீரை வடிய வைக்கவும். ஒரு வாணலை அடுப்பி லேற்றி எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டிய வற்றைத் தாளித்து விட்டு பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி ஒரு கிண்ண த்தில் எடுத்து வைக்கவும்.அதே வாணலை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, புளி, கீரை இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கி இறக்கவும்.தாளித்தது, வதக்கியது இவை எல்லாம் ஆறியதும் மிக்ஸி யில் போட்டு மசித்து எடுக்கவும்.தண்ணீர் சேர்க்கத் தேவை யில்லை.இப்போது சுவையான, சிறிது பிங்க் நிறத்தி னாலான பீட்ரூட் கீரை மசியல் தயார்.

The post பீட்ரூட் கீரை மசியல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...