×

கபடி போட்டியில் தஞ்சாவூர் முதலிடம்

சாயல்குடி, செப். 20: முதுகுளத்தூர் அருகே கூவர்கூட்டம் கிராமத்தில் முனியப்பசாமி கோயில் திருவிழாவையொட்டி மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. முதுகுளத்தூர் அருகே கூவர்கூட்டத்தில் நடந்த கபடி போட்டியை முன்னாள் கவுன்சிலர் நித்திய ஆனந்தம் துவங்கி வைத்தார். கபடி போட்டியில் 15 அணிகள் கலந்து கொண்டன. பகல், இரவாக போட்டி நடந்தது. நேற்று நடந்த இறுதிபோட்டியில் தஞ்சாவூர் அணி முதலிடத்தையும், ஏனாதி அணியினர் இரண்டாம் இடத்தையும், சேலம் அணியினர் மூன்றாம் இடத்தையும், திண்டுக்கல் அணியினர் நான்காம் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்கப்பணமும், கோப்பைகள், கேடயங்களும் வழங்கப்பட்டது. இக்கபடி போட்டியில் மாநில அளவிலான கபடி அணிகள் கலந்து கொண்டன.

Tags : Thanjavur ,
× RELATED கோர்ட்டில் ஆஜர்படுத்தி திரும்பிய...