×

இலங்கையில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும் தவ்கித் ஜமாத் கோரிக்கை

தொண்டி, மே 16: இலங்கையில் கடந்த சில நாட்களாக திட்டமிட்டு இஸ்லாமியர்கள் கடுமையாக தாக்கப்படுகின்றனர். மசூதிகள் சேதப்படுத்தப்படுகிறது. இதை உலக நாடுகள் தடுக்க வேண்டும். மேலும் இங்குள்ள முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். இது குறித்து தமிழ்நாடு தவ்கித் ஜமாத் மாநில செயலாளர் முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இலங்கையில் உள்ள இஸ்லாமியர்கள் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் உள்ளனர். இஸ்லாமியர்களை அழிக்க களம் இறங்கியுள்ள சிங்கள அரசு, முஸ்லிம்கள் தாக்கப்படுவதை வெளியே தெரியாத வகையில் தடுக்கும் விதமாக பேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலை தளங்களுக்கு தடை விதித்து முடக்கியுள்ளனர். முஸ்லீம் வீடுகள் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இதை இலங்கை அரசும் வேடிக்கை பார்த்து வருகிறது. பள்ளி வாசல்கள், திருக்குரான்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர். முஸ்லீம்கள் தாக்குப்படுவது நிறுத்தப்பட வேண்டும். உலக நாடுகள் இதில் தலையிட்டு உடன் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சென்னையில் வரும் 18ம் தேதி இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tawakkat Jamat ,Muslims ,Sri Lanka ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற 3,700 பீடி இலைகள் பறிமுதல்..!!