×

வாக்கு இயந்திரத்தில் முதல் கட்ட பரிசோதனை

திருப்பரங்குன்றம் தொகுதியில் பயன்படுத்தப்படும்  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல்கட்ட பரிசோதனை துவங்கி, நடந்து வருகிறது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், அதிமுக வேட்பாளர் முனியாண்டி, அமமுக வேட்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட 37 பேர் போட்டியிடுகின்றனர்.  இத்தொகுதியில் யாருக்கு ஓட்டு போட்டோம் என வாக்காளர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய விவிபெட் இயந்திரத்துடன் கூடிய 356 மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. 37 பேர் போட்டியிடுவதால், 3 வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தப்படப்பட உள்ளது. இந்த தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்கு இயந்திரங்கள், மதுரை மாவட்டத்தில்,  கடந்த பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தாமல் இருந்த மின்னணு வாக்கு இயந்திரங்கள் சேகரிக்கப்பட்டு,

அவற்றை மாநகராட்சியில் உள்ள பில்லர் அரங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் முறையாக இயங்குகிறதா என்பதை பரிசோதனை செய்ய பெல் நிறுவன 2 பொறியாளர்கள் நேற்று மதுரை வந்தனர். அவர்கள் நேற்று, 356 மின்னணு வாக்கு இயந்திரம், 356 விவிபெட் இயந்திரம், ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரத்தை பரிசோதனை செய்தனர். அந்த பணியை கலெக்டர் நாகராஜன் பார்வையிட்டார். தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நாகராஜன், கோபி, அனீஷ்சர்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த முதல்நிலை பரிசோதனைக்கு பின் நாளை அனைத்து மின்னணு வாக்கு இயந்திரங்களும் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

Tags : stage test ,
× RELATED இங்கிலாந்து ராணுவத்தில் ரோபோ: ஆரம்ப கட்ட சோதனை ஓட்டம் முடிந்தது