×

இங்கிலாந்து ராணுவத்தில் ரோபோ: ஆரம்ப கட்ட சோதனை ஓட்டம் முடிந்தது

லண்டன்: இங்கிலாந்து ராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ரோபோவின் ஆரம்ப கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. போர் மற்றும் தீவிரவாதத் தாக்குதலில் மனித உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் சில நாடுகளில் ரோபோவை வைத்து போரிடும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரோபோ தங்கள் ராணுவத்தில் வைத்துள்ளது.

அந்த வகையில் தற்போது இங்கிலாந்து நாடும் ரோபோவை வைத்து போர் முனை சோதனை ஓட்டம் நடத்தியுள்ளது. இந்த ரோபோ சாதாரணமாக ஒன்றரை அடி உயரம் கொண்டுள்ளது. மேலும் தேவைப்படும் போது 7 அடி உயரம் வரை தொலை நோக்கியை உயர்த்தும் வசதி கொண்டது. ஒன்றரை டன் எடை கொண்ட இந்த ரோபோவானது 7 அடி அகலம் கொண்டுள்ளது. இந்த ரோபோக்களை அதனுடன் இணைக்கப்பட்ட கணினி உதவியுடன் தொலைவில் இருந்து ஜாய்ஸ்டிக் (Joystick) மூலம் இயக்க முடியும்.

மேலும் இந்த ரோபோவின் இயந்திரத் துப்பாக்கி, சிறிய வகை ராக்கெட் குண்டுகள் போன்றவைகளும் பொருத்த முடியும். இதன் மூலம் எதிரிகளின் நடமாட்டத்தையும், தாக்குதலையும் ஒரே நேரத்தில் நடத்த முடியும். பரிசோதனையின் ஒரு பகுதியாக, இராணுவம் ஓட்டுநர் இல்லாத முதல் கவச பீரங்கி வாகனங்களையும் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : stage test ,UK Army , Robot,UK,Army,initial stage,test,ended
× RELATED வாக்கு இயந்திரத்தில் முதல் கட்ட பரிசோதனை