×

திருவள்ளூரில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

ஆவடி: அமைச்சர் சா.மு.நாசர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுகவின் மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம், திருவள்ளூர் அருகே, காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள ஆர்.எம்.கே. விருந்தினர் மாளிகையில் வரும் 25ம் தேதி மாலை 4 மணிக்கு  மாவட்ட அவைத்தலைவர் ராஜி தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மாநில மாணவரணி இணை செயலாளர் ஜெரால்டு, மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் சீனிவாசன், ஜெயபால், காயத்ரிதரன், மாவட்ட பொருளாளர் நரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் எத்திராஜ், ராஜேந்திரன், விமல்வர்ஷன், முத்தமிழ்செல்வன், குமார், மகாதேவன், காஞ்சனாசுதாகர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திருவள்ளூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன் வரவேற்கிறார்.
இதில் மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்பட அனைத்து நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.’’ என தெரிவித்துள்ளார்.

Tags : DMK ,Thiruvallur ,Minister ,S.M. Nasar , DMK Executives Consultative Meeting in Thiruvallur: Minister S.M. Nasar Information
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...