×

கருத்தடை அறுவை சிகிச்சையில் அலட்சியமாக இருந்த தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை

தூத்துக்குடி: கருத்தடை அறுவை சிகிச்சையில் அலட்சியமாக இருந்த தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவர் பதில் தர ஆணை பிறப்பித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜான்சி ராணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.

2016-ல் தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தோம். கருத்தடை அறுவை சிகிச்சைக்கு பின் சில மாதங்களில் நான் மீண்டும் கருவுற்று பெண் குழந்தை பிறந்தது. தலைமை மருத்துவர் பதில் தர நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 8 வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்  

மனுதாரர் கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இருப்பினும் 2020ம் ஆண்டு கருவுற்ற நிலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.மனுதாரருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறையாக செய்யப்படாததால், தற்பொழுது மற்றொரு பெண் குழந்தையை பெற்றெடுத்து உள்ளார். இந்நிலையில்  கருத்தடை அறுவை சிகிச்சையில் அலட்சியமாக இருந்த தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவர் பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறபித்து வழக்கை 8 வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.  


Tags : High Court ,Madurai Branch ,Tuticorin district government , Sterilization Surgery, Negligence, Tuticorin, Chief Medical Officer, Answer, High Court Madurai Branch, Order
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...