தஞ்சை: பிப்ரவரி 8ல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க நிர்வாகிகள் ஜலீல் முகைதீன், செல்வராசு பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
