×

கோவையில் நடைபெற்ற பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்காததால் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடும் அதிருப்தி


கோவை: கோவையில் நடைபெற்ற பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்காததால் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கடும் அதிருப்தி தெரிவித்தார். கோவை மாவட்டம் சூலூரில் ஸ்மிருதி இரானி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஸ்மிருதி இரானி மேடையில் பேசும் போது ஆலோசனை கூட்டத்தில் குறைவான உறுப்பினர்களே கலந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார். மாவட்ட நிர்வாகிகள் எத்தனை பேர் வந்து இருக்கிறார்கள் என எண்ணுமாறும் ஸ்மிருதி இரானி கூறினார். அப்போது 24 மாவட்ட நிர்வாகிகளில் ஒரு சிலரே கூட்டத்திற்கு வந்திருந்ததால் ஸ்மிருதி இரானி மட்டுமன்றி வானதி சீனிவாசனும் அதிருப்தி அடைந்தார்.  


Tags : Temple JA. K. ,Union Minister ,Smriti Irani , Coimbatore, BJP, Consultation, Meeting, Executive, Non-Participation, Smriti Irani, Dissatisfied
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...