×

முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர் நாள் கூட்டம்

புழல்: செங்குன்றம் அருகே தீர்த்தங்கரையம்பட்டு, திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான்(35). நேற்று முன்தினம் இரவு திரைப்படம் பார்க்க செங்குன்றம்  சென்ற இவர், நேற்று அதிகாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த இவர். உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு, 12 சவரன், ரூ.25 ஆயிரம் ரொக்கம், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது. இப்புகாரின்பேரில், செங்குன்றம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Veterans ,Depreciation Day , Special Veterans Day Meeting for Veterans
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...