×

திருநங்கைகள் சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு உடனே நிறுத்தி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: திருநங்கைகள் சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு உடனே நிறுத்தி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ‘ஒன்றிய அரசின் புதிய மசோதாவால் திருநங்கைகளின் உரிமைகள் பறிபோகும் அபாயம் உள்ளது’ எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; ‘திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை, அந்தச் சட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களின் கருத்துகளைக் கேட்காமல் வலுக்கட்டாயமாக நிறைவேற்ற முடியாது.

பாதுகாப்பு என்ற பெயரில் உருவாக்கப்பட்ட ஒரு சட்டத்தை அந்தச் சமூகமே எதிர்க்கும்போது, அது திணிப்பாக இருக்கக்கூடாது; மாறாக, மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.

மத்திய பாஜக அரசு இந்தத் திருத்தங்களை முன்னெடுப்பதற்கு முன், சற்று நிதானித்து, திருநங்கைகளுடன் கலந்துரையாடி, அவர்களின் உண்மையான உடன்பாட்டைப் பெற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Union government ,Chennai ,
× RELATED திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10,...