திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கரும்பூஞ்சை நோய் பாதிப்பால் தனியார் பள்ளி ஆசிரியர் உயிரிழந்துள்ளார். திருப்பத்தூர் அடுத்த ஆதியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சின்னராசு என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். கொரோனா காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் கரும்பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
