×

தீவிரவாதிகளுக்காக போலி முகவரியில் சிம்கார்டு வாங்கிய 2 பேர் கைது

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் எஸ்ஐ வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தீவிரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த 14ம் தேதி கைது செய்யப்பட்டனர். தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் இரண்டு பேரும் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பச்சையப்பன் உள்ளிட்ட 2 பேரை சென்னை கியூ பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இவர்கள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள செல்போன் கடையில் போலியான முகவரி கொடுத்து சிம்கார்டு வாங்கியுள்ளது தெரியவந்தது. எனவே, குமரி எஸ்ஐ வில்சன் கொலைவழக்கில் சம்மந்தப்பட்ட தீவிரவாதிகளுக்கும், காஞ்சிபுரத்தில் சிம்கார்டு வாங்கிய நபர்களுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.


Tags : extremists ,address ,Extremist , 2 people arrested , extremist, fake address, buy SIM card
× RELATED அகமதாபாத் விமான நிலையத்தில்...