- பஜாஜ் ஃபின்சர்வ் துனிவர்ஸ்
- சங்கர்-எஹ்சன்-லாய்
- குரல்
- சங்கர்-எஹ்சன்-லாய் கூட்டணி
- ஐபோட்டி
- இந்தியா
- சங்கர்-எஹ்சன்-லாய் பஜாஜ்
மார்ச் 31-ஆம் தேதி அன்று ஷங்கர்-எஹ்சான்-லாய் கூட்டணியுடன் இணைந்து, பஜாஜ் ஃபின்செர்வ் துனிவர்ஸ் ‘தேசத்தின் குரலை’ அறிமுகப்படுத்துகிறது. பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கான இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மேடையான இப்போட்டியின் வெற்றியாளர் அறிவிக்கப்பட உள்ளார்.
* தேசத்தை எதிரொலிக்கும் ஒரு குரல்: இப்போட்டியின் வெற்றியாளர் ‘தேசத்தின் குரல்’ மற்றும் ‘பஜாஜின் குரல்’ (Voice of the nation’ and ‘Voice of Bajaj’,) ஆகிய பட்டங்களைப் பெறுவதோடு, புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான ஷங்கர்-எஹ்சான்-லாய் மூவருடன் இணைந்து பஜாஜின் பிரத்யேக இசை அடையாளத்தை உருவாக்குவார்.
* இந்தியாவின் அனைத்து திசைகளிலிருந்து ஒரே மேடைக்கு – டிஜிட்டல் வழியில்: புவியியல் தடைகளைத் தாண்டி, அனைவருக்கும் சம வாய்ப்பளிக்கும் இந்த டிஜிட்டல் தளத்தின் மூலம் 60,000-க்கும் மேற்பட்ட திறமையாளர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்த வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.
* இந்தியாவின் கனவுகளை நனவாக்கும் பஜாஜ் ஃபின்செர்வின் அர்ப்பணிப்பு: ஒவ்வொரு துறையிலும் ஒரு சிறந்த சாதனையாளரை உருவாக்கும் நோக்கத்துடன் ‘பஜாஜ் துனிவர்ஸ்’ செயல்படுகிறது; இசையும் அத்தகைய துறைகளுள் ஒன்றாகும்.
மும்பை, 26 மார்ச் 2026: பஜாஜ் ஃபின்செர்வ் இன்று தனது டிஜிட்டல்-முதல் இசைத் திறமைத் தேடல் தளமான ‘பஜாஜ் துனிவர்ஸ்’ஸின் மாபெரும் இறுதிப்போட்டி மார்ச் 31 அன்று மும்பையில் நடைபெறும் என அறிவித்துள்ளது. புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான ஷங்கர்-எஹ்சான்-லாய் முன்னிலையில் இந்த நிகழ்ச்சியில் ‘தேசத்தின் குரல்’ என்ற விருதைப் பெறும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
கடந்த ஆறு மாதங்களில், தொழில்நுட்பத்தின் உதவியோடு சிறந்த இசைக் கலைஞர்களைக் கண்டறியும் நம்பகமான தளமாக பஜாஜ் துனிவர்ஸ் உருவெடுத்துள்ளது. பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை உள்ள 60,000-க்கும் மேற்பட்டோர் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளின் மூலம் தங்கள் இசைத்திறமைகளை வெளிப்படுத்தி, இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். இசையமைப்பாளர்களான சங்கர்-எஹ்சான்-லாய், சமர்ப்பிக்கப்பட்ட பதிவுகளிலிருந்து வெற்றியாளரை தேர்வு செய்ய உள்ளனர்.
மாபெரும் இறுதிப் போட்டியில், ஷங்கர்-எஹ்சான்-லாய் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 இறுதிப் போட்டியாளர்கள் மற்றும் ஒரு ‘வைல்ட்-கார்டு’ போட்டியாளர் என மொத்தம் 11 பேர் நேரில் தங்களின் இசைத்திறமையை வெளிப்படுத்துவார்கள். இப்போட்டியின் வெற்றியாளராக தேர்வு செய்யப்படும் சாதனையாளர், ஷங்கர்-எஹ்சான்-லாய் உடன் இணைந்து பஜாஜின் இசை அடையாளத்தை உருவாக்குவதற்கும், ஜீ மியூசிக் கம்பெனியுடன் இணைந்து ஒரு சுயாதீன இசை தொகுப்பை உருவாக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.
டிஜிட்டல் செயல்தளங்கள் பிரிவின் தலைவர் மானவ் மியான்வால் கூறுகையில், “திறமைகளைப் பயன்படுத்தி புதிய முன்மாதிரி நபர்களை உருவாக்கும் தளங்களை நிறுவுவதை நாட்டுக்கும், நமது மக்களுக்கும் நாங்கள் ஆற்ற வேண்டிய ஒரு கடமையாக கருதுகிறோம். கலை, விளையாட்டு, தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் இத்தகைய செயல்தளங்களை நாங்கள் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம். அந்த வகையில் பஜாஜ் துனிவர்ஸ் செயல்தளமானது, எங்களின் நீண்டகால பொறுப்புறுதி திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. முதல் ஆண்டில் எங்களுக்குக் கிடைத்துள்ள அமோக வரவேற்பு, இரண்டாம் ஆண்டை இதைவிட பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடத்த எங்களுக்கு ஊக்கமளித்திருக்கிறது” என்றார்.
இசை மேடைக்கான இந்த முன்னெடுப்பு குறித்து நடுவரான ஷங்கர் மகாதேவன் பேசுகையில், “இந்தியாவின் அனைத்து மூலைகளிலிருந்தும் இசைத் திறமையாளர்களைக் கண்டறிந்து அவர்களைப் பிரபலப்படுத்தி உயர்த்துவது என்ற பஜாஜ் துனிவர்ஸ் திட்டத்தின் நோக்கமே என்னை மிகவும் கவர்ந்தது. டிஜிட்டல் முறையிலான இப்போட்டியின் அணுகுமுறை இதில் பங்கேற்பை உண்மையாகவே எளிதாக்கியுள்ளது. இதனால், அங்கீகரிக்கப்பட வேண்டிய பல அற்புதமான திறமையாளர்களின் குரல்கள் வெளிவந்துள்ளன.” என்று கூறினார்.
எஹ்சான் நூரானி மேலும் பேசுகையில், “தேர்வின் போது போட்டியாளர்களின் திறமையும், இசையின் மீதான அவர்களின் ஆழமான அர்ப்பணிப்பும் வியக்கத்தக்க வகையில் இருந்தன. நாடு முழுவதிலுமிருந்து வெளிப்பட்டிருக்கின்ற இசை ஆர்வலர்களின் தரம் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக இருந்தது.”
லாய் மென்டோன்சா இது குறித்து கூறியதாவது: “இந்தியாவில் எப்போதுமே அபரிமிதமான இசைத் திறமை உள்ளது. இசைக் கலைஞர்கள் முன்வந்து தங்களது இசைத்திறனை உலகறியச் செய்வதற்கான ஒரு மேடையை பஜாஜ் துனிவர்ஸ் தளம் உருவாக்கியுள்ளது. இதில் நடுவராக செயல்பட்டது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. இறுதிப் போட்டியைக் காண நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.”
யூடியூபில் பஜாஜ் துனிவர்ஸ் காணொளியைக் காண:
பஜாஜ் துனிவர்ஸ் – வளர்ந்து வரும் திறமையாளர்களைக் கண்டறிந்து, வளர்த்து, கொண்டாடுவதற்காக நாடு தழுவிய இசைத் தேடல் முயற்சியாக பஜாஜ் துனிவர்ஸ் தொடங்கப்பட்டது. நாடெங்கிலும் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்பதற்கான வாய்ப்பை வழங்கும் ஒரு டிஜிட்டல் முறையிலான இசை திறமைசாலிகளை தேடி கண்டறியும் தளமாக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வலுவான டிஜிட்டல் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட இது, நேரடி ஆடிஷன்களில் பங்கேற்கும் சிரமங்கள் இல்லாமல் – அனைத்து வயது பிரிவுகளையும் சேர்ந்த பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு வெளிப்படையான மதிப்பீடு முறையை வழங்குகிறது.
தேசிய அளவில் சிறப்பான வரவேற்பு;
நவம்பர் 7, 2025 அன்று தொடங்கி ஜனவரி 8, 2026 வரை இப்போட்டிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொலைக்காட்சி விளம்பரங்களோ அல்லது பெரிய அளவிலான பிரச்சாரங்களோ இல்லாமல், 60,000-க்கும் மேற்பட்ட ஆடியோ / வீடியோ பதிவுகள் விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்டன. சிறு நகரங்கள், கிராமங்கள் மற்றும் பெருநகரங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இப்போட்டியில் பங்கேற்று வெற்றி காணும் சம வாய்ப்பை இந்தத் தளம் உறுதி செய்தது.
ஷங்கர்-எஹ்சான்-லாய் குழுவினரின் வழிகாட்டுதல் மற்றும் தேர்வு;
கடுமையான மற்றும் பல கட்டங்களை உள்ளடக்கிய தேர்வு முறையின் மூலம் சிறந்த 100 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு ஷங்கர்-எஹ்சான்-லாய் குழுவினர் டிஜிட்டல் முறையில் வழிகாட்டுதலை வழங்கி மதிப்பீடு செய்தனர். இவர்களில் இருந்து 10 இறுதிப் போட்டியாளர்களும், ஒரு வைல்ட் கார்டு போட்டியாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மார்ச் 31 அன்று மாபெரும் இறுதிப் போட்டி;
இறுதிப் போட்டியாளர்கள் மற்றும் வைல்ட்-கார்டு போட்டியாளர் ஆகியோர் மார்ச் 31 அன்று மும்பையில் நடைபெறும் நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் ஒளிபரப்பப்படும். இசையமைப்பாளர்கள் ஷங்கர்-எஹ்சான்-லாய் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளருக்குப் பின்வரும் வாய்ப்புகள் கிடைக்கும்:
* ஜீ மியூசிக் கம்பெனியுடன் இணைந்து ஒரு சுயாதீன இசை தொகுப்பை பதிவு செய்தல்.
* ஷங்கர்-எஹ்சான்-லாய் உடன் இணைந்து ஸ்பாடிஃபை பாடல் வெளியீட்டிற்காகப் பணியாற்றுதல்.
* சீசன் 1-ன் ‘பஜாஜின் குரலாக’ மாறி, பஜாஜ் கீதத்தை இணைந்து உருவாக்குதல்.
