×

சாய் பல்லவிக்கு திருமணமா? அவரே சொன்ன பதில்

சென்னை: இந்தியாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் சாய் பல்லவி தற்போது ஆமிர்கான் மகன் ஜுனைத் கான் ஜோடியாக ‘ஏக் தின்’, நிதிஷ் திவாரி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக 2 பாகங்களாக உருவாகி வரும் ‘ராமாயணா’ படத்தில் சீதையாகவும் நடித்து வருகிறார். தமிழில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் தனுஷின் 55வது படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக புதிய படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொளி வாயிலாக கலந்துகொண்ட சாய் பல்லவியிடம் அவரது திருமணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் ‘‘இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. கண்டிப்பாக இப்போதைக்கு இல்லை. சில வருடங்களுக்கு நான் சிங்கிளாகவே இருக்க விறும்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Sai Pallavi ,Chennai ,India ,Sita ,Aamir Khan ,Junaid Khan ,Nitish Tiwari ,Dhanush ,Rajkumar Periyasamy ,Vijay Sethupathi ,Mani Ratnam ,
× RELATED சமூக வலைதளத்தில் காரசாரம்: வழுக்கை தலை...