சென்னை: ரவி மோகன், தனது தோழி கெனிஷாவுடன் சேர்ந்து கோவாவில் புதிதான ஒரு மனை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மனை வாங்கும் போது ரவி மோகன் சில ஆவணங்களை சமர்ப்பித்திருக்கிறார். அதில், குறிப்பிடுகையில் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ரவி மோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கு இன்னும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனக்கு திருமணமாகவில்லை என ரவிமோகன் குறிப்பிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் வெளியாகியுள்ள தகவல்படி, கோவாவில் அவர் மனை வாங்கினாரா, திருமணமாகவில்லை என்ற ஆவணத்தை சமர்ப்பித்தாரா என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இது குறித்து ரவிமோகன்தான் விளக்கம் தர வேண்டும் என அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.
