×

எனது காலில் அடிபட்டால் படம் ஹிட்: டாக்டர் ராஜசேகர் சென்டிமென்ட் பேச்சு

சென்னை: சர்வானந்த், டாக்டர் ராஜசேகர், ‘குக்கூ’ மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி, நிரூப் நடிப்பில், இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் படமாக உருவாகியுள்ள பான் இந்தியா படம், ‘பைக்கர்’. ஜே.யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய, அபிலாஷ் ரெட்டி எழுதி இயக்கியுள்ளார். விக்ரம் ரெட்டி வழங்க, யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பலபதி இணைந்து தயாரித்துள்ளனர். வரும் ஏப்ரல் 3ம் திரைக்கு வரும் இப்படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. டாக்டர் ராஜசேகர் பேசும்போது, ‘சில மாதங்களுக்கு முன்பு எனக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. தற்போது குணமடைந்து வருகிறேன்.

இதற்கு முன்பும் சண்டைக்காட்சியில் நடித்தபோது, எனது இரு கால்களும் முறிந்த அனுபவம் இருக்கிறது. அதில் இடது கால் முதலில் முறிந்தது. அப்போது ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தின் வெளியீடு நெருங்கியதால், என்னால் மருத்துவமனையில் அமைதியாக இருக்க முடியவில்லை. டிசம்பர் 8ம் தேதி வெளியான அப்படத்தை பார்க்க நேராக சத்யம் தியேட்டருக்கு வந்தேன். அப்படம் தமிழில் வெளியாகும் முன்பே தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அப்போது இந்த எலும்புமுறிவு நல்ல அறிகுறி, படம் பெரிய ஹிட்டாகும் என்று பலர் சொன்னது எனது நினைவுக்கு வந்தது. அதுபோல், இப்போது மீண்டும் எலும்புமுறிவுடன் சத்யம் தியேட்டருக்கு வந்துள்ளேன் என்பதால், இப்படமும் மிகப்பெரிய வெற்றிபெறும் என்று நம்புகிறேன்’ என்றார்.

Tags : Dr. ,Rajasekhar ,Chennai ,Sharvanand ,Malavika Nair ,Atul Kulkarni ,Nirup ,India ,J. Yuvaraj ,Abhilash Reddy ,Vikram Reddy ,Vamsi Krishna Reddy ,Pramod Uppalapathy ,UV Creations ,
× RELATED சமூக வலைதளத்தில் காரசாரம்: வழுக்கை தலை...