×

மீண்டும் ரஜினியுடன் நடிக்க விரும்பும் மாளவிகா மோகனன்

ரஜினியுடன் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படங்களில் நடித்த மாளவிகா மோகனன் மாறன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும், எல்லா படத்திலும் பெரிய நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். மாறன் படத்தில் பத்திரிகை போட்டோகிராபராக நடித்திருக்கிறேன்.

தமிழ் வாய்ப்புகள் அதிகமாக வருகிறது. மீண்டும் ரஜினியுடன் நடிக்கும் ஆசை இருக்கிறது. அதேபோல வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஐஸ்வர்யாராய்தான் எனது ரோல் மாடல் அவரது வாழ்க்கை சினிமாவாக எடுக்கப்பட்டால் அதில் நான் நடிக்க முயற்சிப்பேன். என்றார்.

Tags : Malvika Mohanan ,Rajini ,
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...