×

அமானுஷ்ய கதை பிஹைண்ட்

சென்னை: ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக ‘பிஹைண்ட் ‘ உருவாகி உள்ளது. இப்படத்தை அமன் ரஃபி எழுதி இயக்கி உள்ளார். ஷிஜா ஜினு படத்திற்கான கதையை எழுதி தனது பாவக்குட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். ஒரு தாய் தனது குழந்தைக்கு அமானுஷ்யமான ஆபத்து வந்து இருப்பதை உணர்கிறாள். அவள் தனது குழந்தையை மீட்டாளா? அந்த ஆபத்து எத்தகையது? அது யாரால் ஏற்படுகிறது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வது தான் பிஹைண்ட் திரைப்படம்.

தாயாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். அவரது மகளாக மினு மோல் நடித்துள்ளார். சோனியா அகர்வாலின் கணவராக டாம் நடித்துள்ளார். சந்தீப் சங்கரதாஸ் மற்றும் டி. ஷமீர் முகமத் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். வைசாக் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். இசை முரளி அப்பாதத், ஆரிப் அன்சார் மற்றும் சன்னி மாதவன்.

 

The post அமானுஷ்ய கதை பிஹைண்ட் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Aman Rafi ,Shija Jinu ,Bhavakutty Creations ,Amanushya Kathi Behind ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்